முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் தரவரிசையில் 3 வது இடம்: இந்திய அணிக்கு பரிசு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable


துபாய், ஏப் 17 - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தர வரிசையில் சிறந்து விளங்கும் அணிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு தொகை வழங்கி வருகிறது.
கடந்த 1ம் தேதி நிலவரப்படி டெஸ்ட் தர வரிசையில் இந்திய அணி 3 வது இடத்தில் உள்ளது. இதன்படி இந்திய அணிக்கு ஐசிசி ரூ. 1.6கோடி வழங்கியுள்ளது. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு ரூ. 2.86 கோடி பரிசு தொகை கிடைத்தது. அந்த அணி 2012 ஆண்டு ஆகஸ்ட் முதல் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு ரூ. 2.24 கோடியும், 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு ரூ. 97 லட்சமும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்