முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22ம் தேதி மாலைக்கு மேல் பிரச்சாரம் கூடாது: பிரவீண்குமார்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.20 - தமிழகத்தில் 22_ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:_ 

இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட  21 கோடியே 52 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 17 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள நகைகள், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 94 ஆயிரம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் சமூக வலைதளங்கள், கைப்பேசி குறுந்தகவல்கள், உள்பட எந்த வடிவத்திலும் பிரச்சாரம் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . வரும் 24_ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது மாற்றுதிறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியபட்டுள்ளது. அவற்றில் ஆயிரத்து 337 வாக்குச்சாவடிகளுக்கு அச்சுறுத்தல்கள் உள் ளது. தேர்தல் பாதுகாப்புக்காக துணை ராணுவ வீரர்கள் ஏற்கனவே வந்துள்ளனர்; இன்றுமேலும்  

கூடுதல் படையினர் வந்துள்ளனர்.இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்