முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவேரி பிரச்சினை: பா.ஜ.க.வுக்கு முதல்வர் ஜெயலலிதா கேள்வி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.20 - காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை பாரதீய ஜனதா கட்சி அளிக்குமா? என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, பூந்தமல்லி சாலை, அண்ணா வளைவு, பச்சையப்பன் கல்லூரி, நிக்ஷ் ஆவடி ரோடு, ஹால்ஸ் ரோடு, கீழ்பாக் கார்டன் ரோடு, நியூ ஆவடி ரோடு, மேடவாக்கம் டேங்க் ரோடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, டவுன் பிரிட்ஞு, நாராயண குரு சாலை வழியாகச் சென்று `சளை தபால் நிலையத்திலும்', சூளை நெடுஞ்சாலை, சளை ரவுண்டானா, சைடன் ஆம்ஸ் ரோடு, யானைகவுனி பாலம் வழியாகச் சென்று `வால்டாக்ஸ் சாலை சந்திப்பிலும்', <.வெ.ரா. சாலை சந்திப்பு, காந்தி இர்வின் பாலம், எல்.ஜி. ரவுண்டானா, ஏ.என். தெரு, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக `திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பிலும்' புள்ளி விவரங்களோடு உரையாற்றி, கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, , தமது பிரச்சார சுற்றுப் பயணத்தின் நிறைவு இடமான `திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில்', திமுக சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறனுடைய சுயநலவாத செயல்களை தெளிவுபட எடுத்துக் கூறியதோடு, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு அவலங்களை தோலுரித்துக் காட்டியதோடு, `மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழக மக்களை வஞ்சித்து எத்தனையோ துரோகங்களை இழைத்துள்ளது.  அந்த மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும் என்றும், அதற்கு அனைத்து துரோகங்களிலும் துணை போன திமுக_வை விரட்டியடிக்க வேண்டும் என்று தான் தமிழக மக்கள் அனைவரும் இன்று விரும்புகிறார்கள் என்றார்.

மேலும் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை வருமாறு:_

வாக்காளப் பெருமக்களே! பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி  ஒரு தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், காவேரி பிரச்சனையைத் தீர்க்க இரண்டு விஷயங்களை சொல்லி இருக்கிறார். ஒன்று; மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்க்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.  இரண்டு; நதிகள் இணைக்கப்பட வேண்டும்.  இவற்றின் மூலம் காவேரி பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி உள்ளார். 

கர்நாடகாவின் பல ஆண்டு கால வரலாறு, பேச்சுவார்த்தைக்கு அழைத்து தமிழகத்தை வஞ்சிப்பது தான். இந்த ஏமாற்று வேலையைத் தான் தி.மு.க.வும் செய்து வருகிறது. காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையை வழங்கிய பின்னர், 

அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தானே நியாயம்?  காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை பாரதீய ஜனதா கட்சி அளிக்குமா என்று நான் கேட்டால், அதற்கு பதில் அளிக்காமல் இரு மாநில பிரச்சனையைத் தீர்க்க ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது பிரச்சனையை திசை திருப்பும் செயலாகும்.

அதே போன்று, மகாநதி_கோதாவரி_காவேரி இணைப்பினை மேற்கொள்வதற்கான உத்தரவாதத்தினை அளிக்க பி.ஜே.பி. ஏன் தயங்குகிறது? தமிழகத்தில் நதிகளை இணைப்பதற்குத் தேவையான நிதியை அளிப்போம் என்ற உறுதியை கூட பி.ஜே.பி ஏன் அளிக்கவில்லை?

இவையெல்லாம் போகட்டும்.  காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு இணங்க, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கூட பி.ஜே.பி_யால் அளிக்க முடியவில்லையே! எனவே, காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் பாரதீய ஜனதா கட்சியினால் தமிழகத்திற்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படாது என்பது தான் உண்மை.  

காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்குரிய உரிமையை பெற்றுத் தரக் கூடிய ஒரே இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என்றும்,  

"வாக்காளப் பெருமக்களே! அண்மையில் கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, தமிழக மீனவர் பிரச்சனைக்கு, நானும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் மோதிக் கொள்வதே காரணம் என்று கூறியுள்ளார். ஆனால், ராமநாதபுரத்தில் பேசும் போது, குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் சிறை பிடிப்பதற்கும், தமிழக மீனவர்களை இலங்கை அரசு சிறை பிடிப்பதற்கும் காரணம் மத்தியில் வலுவான அரசு இல்லாதது தான் என்று கூறியிருக்கிறார். 

நரேந்திர மோடியின் கன்னியாகுமரி பேச்சின்படி பார்த்தால் குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் அரசு சிறைபிடிப்பதற்கு காரணம், நரேந்திர மோடியும், சோனியா காந்தியும் மோதிக் கொள்வது தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழக மீனவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒரே இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

வாக்காளப் பெருமக்களே! ஒன்றை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.  என்றைக்கு இருந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் உங்களுக்கு துணை நிற்கும்.  உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தான் என்றைக்கும் உங்களுக்கு துணையாக இருப்பேன்.  சில தலைவர்கள் இருக்கிறார்கள்.  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை, சுற்றுப் பயணத்தை அறிவிக்கிறார்கள்.  ஆனால், அவர்கள் பிரச்சாரம் ரத்து செய்கின்ற நாட்கள் தான் பிரச்சாரம் செய்கின்ற நாட்களைவிட அதிகமாக இருக்கிறது.  ஆனால், என்னை எடுத்துக்கொள்ளுங்கள், நான் வருகிறேன் என்று சொன்னால் நிச்சயமாக வருவேன்.  உங்களை சந்திக்கிறேன் என்று சொன்னால் நிச்சயமாக உங்களை சந்திப்பேன்.  இன்று எனக்கு கடுமையான காய்ச்சல் உள்ளது.  ஆனால், நான் பிரச்சாரத்தை ரத்து செய்யவில்லை.  வருகிறேன் என்று வாக்களித்துவிட்டேன்.  அதனால், டாக்டரை கேட்டு ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க இங்கே வந்திருக்கிறேன்.  அது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  அது தான் உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நடைமுறை.

இவ்வாறு அவர் எழுச்சிமிகு உரை நிகழ்த்தி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.

நிறைவாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக தமது இல்லம் வந்தடைந்தார்.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி_ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியிலும், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை மாநகரில் சறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை வரவேற்கும் விதமாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, ஆங்காங்கே கழகக் கொடித் தோரணங்கள் கட்டப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் முழங்க, 

கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளையும், `இரட்டை இலை' சின்னத்தையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். 

கழகப் பொதுச் செயலாளர், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுடைய சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தின் 26_ஆம் நாளான நேற்று, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி_ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடல் அலை போல் திரண்டிருந்து நல்லாதரவு அளித்ததைப் பார்க்கும் போது, கழக வேட்பாளர்களான 

வி.என்.பி. வெங்கட்ராமன், கே.என். ராமச்சந்திரன், எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோரது வெற்றிகள் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பதை உணர்த்துவதாக அமைந்திருந்தது.     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்