முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹேமமாலினி தவறான தகவல் அளித்துள்ளதாக புகார்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

மதுரா, ஏப்.20 - உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேமமாலினி, தனது திருமணத்தின் போது இஸ்லாம் மதத்திற்கு மாரியது பற்றி வேட்மனுவில் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர் டி.கே.தியாகி புகார் செய்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் டெல்லியைச் சேர்ந்த அவர் அளித்துள்ள புகாரில், வேட்புமனுவில் உண்மையான கல்வித் தகுதியை குறிப்பிடாமல் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கப்பட்டதை மட்டுமே ஹேமமாலினி குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் விஷால் சௌஹான் கூறுகையில், இது தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் எவுப்பவில்லை என்பதால், தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நெரிமுறைகள் பின்பற்றப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது. புகார் அளித்தவர் நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர வேண்டும் என்றார்.

இதுகுறித்து பிரஜ் பகுதியின் பாஜக தலைவர் புருஷோத்தம் கண்டேல்வால் கூறுகையில், தடை ஏற்படுத்த வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி எழுப்பியுள்ள இக்குற்றச்சாட்டை மறுக்கிறோம். இது தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால், அதை பாஜக எதிர்க் கொள்ளும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்