முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசி தங்கியிருந்த கெஜ்ரிவால் பெற்றோருடன் வெறியேற்றம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

வாரணாசி, ஏப் 20 - வாரணாசி கோவில் வளாகத்தில் தங்கிய கெஜ்ரிவாலும், பெற்றோரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம்ஆத்மி கட்சி நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டு நேரடியாக களத்தில் குதித்துள்ளார். இதற்காக கெஜ்ரிவால், தந்தை கோபிந்த் கெஜ்ரிவால், தாய் சீதாதேவியுடன் வாரணாசி சென்று தங்கியுள்ளனர். வாரணாசியில் பிரசித்தி பெற்ற சங்கத் மோச்சன் கோவில் வளாகத்தில் அறை எடுத்து கடந்த 15ம் தேதி முதல் தங்கி உள்ளனர். 

அந்த கோவிலின் தலைமை குருக்கள் பிஷாம் பார் மிஸ்ராவின் சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் தங்கியிருந்த நிலையில் நேற்று திடீரென்று கெஜ்ரிவாலும், அவரது பெற்றோர்களும் கட்டாயமாக கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 

கெஜ்ரிவாலை பார்க்கவும், ஆலோசனை நடத்தவும் அடிக்கடி கட்சி தொண்டர்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். இது பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், வழிபாட்டு தலங்களை அரசியலுக்கு பயன்படுத்த கூடாது என்றும் பக்தர்களிடம் இருந்து புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால் முகாமிட்டு கலக்கி வருவதால் பாஜகவினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே 2 முறை கெஜ்ரிவால் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்தி தடுத்தனர். இதன் தொடர்ச்சியாகவே கோவில் வளாகத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்று ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கெஜ்ரிவாலும், பெற்றோரும் துர்கா குண்ட் என்ற இடத்தில் தங்கி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்