முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்களிக்க தேவையான ஆவணங்கள்: தேர்தல் ஆணையம்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.23 - நாடாளுமன்ற  தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளப் பெருமக்களுக்கான அடையாள ஆவணங்களுக்கான பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் , வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டால் வேறு எந்த,எந்த ஆவணங்களை கொண்டு செல்லலாம் என்பதை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளார் அட்டையையும் சேர்த்து மொத்தம் 12 ஆவணங்களை கொண்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகளை கொண்டு சென்று வாக்களிக்கலாம்

அதே போல வங்கிக் கணக்கு அட்டைப் புத்தகம் மற்றும் தபால் அலுவலக கணக்கு அட்டையை வாக்களிக்க பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருப்பது கட்டாயம் ஆகும். பான் கார்டு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் அடையாள அட்டை , தொழிலாளர் நல வாரியத்தால் வழங்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் அட்டை , ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் இவற்றை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்