முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரம் ஓய்ந்தது: தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 23 - தமிழகத்தில் உச்சகட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் ஒரு உச்ச கட்ட நடவடிக்கையை எடுத்து அரசியல் கட்சிகளை மிரள வைத்துள்ளது. அது தான் 144 தடையுத்தரவு.

அதிமுக பொதுசெயலாளரான ஜெயலலிதா நேற்று முன்தினமே தனது பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார். திமுக தலைவர் கருணாநிதி மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் நேற்று  மாலை தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவுஅமலுக்கு வந்தது.இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும்என்று தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்  சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:_ 

தமிழ்நாட்டில் நாளை  (24_ந்தேதி) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும். தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம். 

அவை 1.பாஸ்போர்ட், 2.டிரைவிங் லைசென்ஸ், 3.பொதுத்துறை_மத்திய, மாநில அரசுகள் பணியாளர்களின் அடையாள அட்டை,  4.வங்கி புத்தகம் மற்றும் அஞ்சலக கணக்கு புத்தகம் (அனைத்தும் போட்டோவுடன் இருக்க வேண்டும்). 5.பான்கார்டு, 6.ஆதார் அடையாள அட்டை, 7.தேசிய மக்கள் கணக்கெடுப்பு அட்டை, 8.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை, 9.தொழிலாளர் துறை வழங்கிய அட்டை, 10.பென்சன் அட்டை, 11.போட்டோவுடன் கூடிய தேர்தல் கமிஷன் வழங்கிய பூத்_சிலிப். 

இந்த 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி ஓட்டு போடலாம். 

கடந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகியவற்றை காட்டி ஓட்டுபோட அனுமதித்தோம். இந்த தேர்தலில் 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம். ஆனால் ரேசன் கார்டை காட்டி ஓட்டுபோட இயலாது. 

அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை ஓட்டுச்சாவடிக்கு கொண்டு வரலாம். அதில் கட்சி சின்னம் இருக்கக்கூடாது. அரசியல் கட்சிகள் தரும் பூத்_சிலிப்பை வைத்து ஓட்டுச்சீட்டு நம்பரை சரிபார்க்கலாம். ஆனால் அதை வைத்து உரிமை கோர முடியாது.

ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்குள் மது போதையில் யார் சுற்றினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. என்றாலும் சிலர் ஓட்டுப்பதிவு தினத்தன்று போதையில் நடமாடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் முதன் முறையாக இன்று (நேற்று)மாலை 6 மணி முதல் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இது 24_ந்தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு நீடிக்கும். இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். எனவே இன்று  (நேற்று) மாலை முதல் 24_ந்தேதி காலை 6 மணி வரை 5 பேர் அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் சேர்ந்து செல்லக்கூடாது. 4 பேர் செல்லலாம். 

இன்று  (நேற்று)மாலை 6 மணியுடன் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கி இருந்தால் வெளியேற வேண்டும். திருமண மண்டபங்களில் கும்பலாக தங்கி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

பணப்பட்டுவாடா பற்றி நிறைய புகார்கள் வருகிறது. இதைத் தடுக்க ஏற்கனவே 2 ஆயிரம் குழுக்கள் உள்ளது. தற்போது மேலும் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து பணப் பட்டுவாடா நடக்கிறதா என்று கண்காணிக்கிறோம். நேற்று நடந்த சோதனையில் திருவண்ணாமலையில் ரூ.94 லட்சம், நாமக்கல்லில் ரூ.1 லட்சமும் பூத்_சிலிப்புடன் பிடிபட்டுள்ளது. 

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை நிலை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் உள்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் உள்ளனர். 2.93 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் தேர்தல் பணியில் <ஈடுபடுத்தப்படுவார்கள். இன்றே அவர்கள் மின்னணு எந்திரங்களுடன் ஓட்டுச் சாவடிக்கு சென்று விடுவார்கள். 

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணபட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது. இதுவரை கணக்கில் வராத ரூ.51 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்பதே எங்களது இலக்காகும். ஓட்டுப்பதிவு நாளன்று பகல் நேர சினிமா காட்சிகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வந்தது. ஆனால் சினிமா காட்சிகளை ரத்து செய்ய சட்டத்தில் இடம் இல்லை. 

வாக்காளர்கள் நாளை மறுநாள் மாலை 6 மணி வரை வாக்கு அளிக்கலாம். மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு கடைசி நேரத்தில் டோக்கன் கொடுக்கப்படும். அவர்கள் வரிசையில் நின்று எவ்வளவு நேரம் ஆனாலும் வாக்கு அளித்து விட்டு செல்லலாம். 6 மணிக்கு பிறகு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago