முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறையை தூண்டும் பேச்சு: தொகாடியா மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

பாவ்நகர்,ஏப்.23 - மத வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா மீது குஜராத் மாநிலம் பாவ்நகர் போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

பிரவீண் தொகாடியா மீது சட்டப்பிரிவுகள் 153(ஏ), 153(பி) மற்றும் 188 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான பி.கே.சோலங்கி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பாவ்நகர் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பங்கேற்றார். அப்போது, அந்த வீட்டை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்படியும், பஜ்ரங் தளம் அமைப்பின் பலகையை தொங்கவிடுமாறும் தொகாடியா அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

இந்தநிகழ்ச்சியில் பிரவீண் தொகாடியா கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்த வீட்டை வாங்கி, குடியேறியுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால், கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவரின் அலுவலகத்தை முற்றுகையிடுங்கள். அதில் தவறேதும் இல்லை.

ராஜீவ் காந்தியை கொன்றவர்களே தூக்கிலிடப்படாமல் உள்ளனர். எனவே, வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப்பற்றி பயப்பட வேண்டாம். வழக்கு நீண்ட நாள்களுக்கு நடைபெறும். இவ்வாறு பிரவீண் தொகாடியா பேசினார்.

அந்த வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கக்கூடும் என்பதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், தொகாடியா அவ்வாறு பேசவில்லை. அவரின் பேச்சு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரிவினை சிந்தனையை நாங்கள் தெரிவிப்பதில்லை. அனைத்து மக்களையும் ஒன்றாகத்தான் நினைப்போம். ஒரே மக்கள், ஒரே தேசம் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்