முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்வானி - ஜோஷி ஓரம் கட்டப்பட்டுள்ளனர்: சரத்பவார்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.23 - பாஜகவில் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஓரங்கட்டப்பட்டு மொத்த அதிகாரமும் நரேந்திர மோடி எனும் தனி மனிதரிடம் முடக்கப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக சரத்பவார் மேலும் கூறியுள்ளதாவது:-

அத்வானி பாஜகவின் முன்னாள் தலைவர். அவர் போபால் தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், நிர்பந்தங்கள் காரணமாக அவர் விருப்பத்துக்கு மாறாக மீண்டும் காந்திநகரிலேயே போட்டியிடுகிறார். முரளி மனோகர் ஜோஷிக்கும் இதே நிலை தான். ஜஸ்வந்த சிங், கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அவர் இப்போது சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஜனநாயக நாட்டில் இந்த மாதிரியான நடவடிக்கைகள் வருத்தம் அளிக்கின்றன. மோடி அவரது கட்சியை ஆள நினைக்கிறார். இது அவர்கள் உட்கட்சி விவகாரம், இருந்தாலும் அதிகார முடக்கம் ஊழலுக்கு வழிவகுக்கும் இதனால பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஹிட்லர், ஜனநாயக முறைப்படியே தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மொத்த அதிகாரத்தையும் அவர் தன்வசம் முடக்கியதால் யூத இனம் அழிக்கப்பட்டது. அவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்.

அத்வானி, ஜோஷி, ஜஸ்வந்த சிங்குக்கு ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்கள், மோடியிடம் அதிகாரம் முடங்கியுள்ளதை எடுத்துரைக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்