முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு 370-வது பிரிவு அளித்த பலன்கள் என்ன? ராஜ்நாத்

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப்.23 - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது நீக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அந்தப் பிரிவால் ஜம்மு காஷ்மீர் எவ்வாறு பயனடைந்தது என்பதைக் கூற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசியலமைப்பின்ச் சட்டத்தின் 370-வது பிரிவால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் எந்த பலனையும் அடையவில்லை என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த மாநிலம் பலனடைந்திருந்தாலோ, அதன் ஏழ்மையைக் குறைக்க அப்பிரிவு உதவி செய்திருந்தாலோ அதை நாங்கள் வரவேற்போம். ஆனால் அது நடக்கவில்லை இந்த விவகாரம் குறித்து விவாதத்தில் ஈடுபடத் தயார் என்று ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீறுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கூடிய பிரிவு 370ஐ நீக்குவது குறித்து அனைத்துத் தரப்பினரடன் கலந்தாலோசிக்கப்படும் என்று அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்து பதிலளித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மற்றும் நமது இதர நாடுகளுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுடன் நட்புறவு கொள்வதற்கான எண்ணத்தை பாகிஸ்தானும் கொண்டிருக்க வேண்டும்.

அண்டை நாடுகளுடனான நட்புறவை வலுப்படுத்த மன்மோகன் சிங் அரசு தவறிவிட்டது. பாகிஸ்தான் மற்றும் இதர அண்டை நாடுகளுடன் ஏற்கெனவே நாங்கள் நட்பு கரம் நீட்டியுள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago