முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுராவில் ஹேமமாலினிக்கு எதிராக துண்டு பிரசுரம்!

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

மதுரா, ஏப்.23 - உ.பி.மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் பாஜ சார்பாக போட்டியிடும் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக அவதூறு துண்டுபிரசுரம் வினியோகித்த மர்மநபர்களை தேர்தலில் ஆணைய உத்தரவின் பேரில் போலீஸார் தேடி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜ சார்பாக இந்தி நடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக இவரது இரண்டு மகள்கள் அகானா, இஷா ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கணவரும் நடிகருமான தர்மேந்திரா பிரசாரத்துக்கு வரவில்லை. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹேமமாலினி தனது வேட்பு மனுவில் தாம் மதம் மாறிய விவரத்தை தெரிவிக்கவில்லை  என குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை மதுராவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அனைத்து தினசரி பத்திரிகைகளுக்கு உள்ளே ஹேமமாலினியை கடுமையாக விமர்சித்து துண்டு பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 

யுவஜக்ரிதி அபியான் என்ற அமைப்பின் சார்பாக இந்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில் ஹேமமாலினி மதம் மாறியது பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. ஆனால், துண்டு பிரசுரத்தை வெளியிட்ட நபர் அச்சிட்டவர், வினியோகித்தவர் பெயர் இல்லை. இது குறித்து தேர்தல்  அதிகாரியிடம் ஹேமமாலினின் உதவியாளர் புகார் அளித்திருந்தார். மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரி திரேந்திர சிங் உத்தரவின் பேரில் துண்டு பிரசுரம் வினியோகித்த மர்ம நபர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்