முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வாக்குச் சாவடிகளில் எந்திர கோளாறால் தாமதம்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - சென்னையில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் நேற்று ஓட்டுப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓட்டுப் போட்ட கோபாலபுரம் சாரதா பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கும் போது, மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அதை சரிசெய்ய 40 நிமிடங்கள் ஆனது. இதனால் இங்கு 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

ராஜா அண்ணாமலைபுரம், கே.கே.நகர், அசோக் நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுது ஆனதால் ஓட்டுப்பதிவு 30 நிமிடங்கள் தாமதம் ஆனது.

அம்பத்தூர், கல்லிக்குப்பம், அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. அதை அதிகாரிகள் சரிசெய்தனர். இதனால் 1 மணி நேரம் தாமதமாக ஒட்டுப்பதிவு தொடங்கியது.

இதுதவிர கொளத்தூர், மடிப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட 15 இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது. பின்னர் சரிசெய்யப்பட்டது. மக்கள் காத்திருந்து ஓட்டு போட்டனர்.

எல்லாபுரம் அருகே உள்ள நெய்வேலியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி எண். 214_ல் 7.20 மணிக்கு திடீரென மின்னணு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் 7.40 மணிக்கு எந்திரம் சரிசெய்யப்பட்டது.

இதேபோல் பெரியபாளையம் அருகே உள்ள தண்டுமேடு பகுதியில் வாக்குச்சாவடி எண் 225_ல் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோதே எந்திரம் பழுதானது. சுமார் 1ஙு மணி நேரத்திற்கு பின்னர் புதிய எந்திரம் கொண்டு வரப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மண்டல அலுவலர் சாவித்திரி தலைமையில் பழுதான எந்திரம் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

செங்குன்றம் அருகே உள்ள புள்ளிலைன் ஊராட்சி புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக காலை 6.30 மணியில் இருந்தே வாக்காளர்கள் காத்து நின்றனர்.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோது பெண்களுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் வாக்காளர்கள் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் <டுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 8.15 மணிக்கு எந்திரம் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்