முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா ஓட்டு போட்டார்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.25 - முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று காலை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சா வடியில் ஓட்டுபோட்டார். 9.10 மணிக்கு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓட்டு போட்டு விட்டு 9.12 மணிக்கு புறபட்டு செ ன்றார்.

செ ன்னை கதீட்ரல் சாலை யில் உள்ளஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மத்திய சென்னை தொகுதிக்கான பல்வேறுவாக்குச்சாவடிகள் உள்ளன. அங்கு196_ம் எண் பொது வாக்குச்சா வடியில்வாக்களிக்க முதலமைச்சர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்கு அங்கு வந்தார். நேராக வாக்குச்சா வடிக்கு சென்று தனதுவாக்கை பதிவு செய்துவிட்டு 9.12மணிக்கு வெளியே வந்தார்

ஓட்டு போட்டு விட்டு வெளியே வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை நிருபர்கள் சந்தித்தார். அப்போது அவர்களிடம், வாக்குப்பதிவு அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறதேர்தல் ஆணையத்துக்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும். என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். தற்போது கருத்து எதுவும் சொல்லவிரும்ப வில்லை . தேர்தல் முடிவுகள்வெளியான பின்னர் எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறினார். 

முதலமைச்சரை காலை 9 மணிக்கு ஓட்டுபோட வருகிறார் என்றதும் பத்திரிகைநிருபர்களும், புகை ப்படகாரர்களும், டி.வி. கேமிரா மே ன்களும் அங்கு வந்துகுவிந்தனர். பல டி.வி.க்கள் ஜெயலலிதா ஓட்டு போட வந்ததை நேரடி ஒளிபரப்பு செய்தார்கள் . ஓட்டு போட்டு விட்டுமிகுந்த மகிழ்ச்சியுடன் முதல்வர் ஜெயலலிதாஅங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு முதலமைச்சரை வரவேற்ற மத்திய சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். முதலமைச்சரை, அமைச்சர்பா.வளர்மதி, மத்திய செ ன்னை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் மேயர்சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் நுங்கை மாறன்எம்.சி., ஆயிரம் விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ் எம்.சி. ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஸ்ரீரங்க ம் ரங்கநாதசாமி கோவில் உள்படபல்வேறு கோவில்களில் இருந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்ட து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்