முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்பந்தாட்டம் நடைபெற உள்ள பிரேசிலில் கலவரம்

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ரியோ டி ஜெனிரோ, ஏப். 25- உலககோப்பை கால்பந்தாட்ட போட்டி துவங்க இன்னும் இரு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடித்துள்ளன. போதை மருந்து கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று போலீசார் தவறாக நினைத்து உள்ளூர் நடன கலைஞர் ஒருவரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொலை செய்துவிட்டார்கள் இதனால் கோபமடைந்த உள்ளூர் மக்கள் சாலைகளில் சென்ற கார்களை அடித்து நொறுக்கியும், டயர்களை சாலைகளில் எரித்தும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரியோ டி ஜெனிரோ நகருக்கு அருகில் கொப்பகனபானா என்ற சுற்றுலாவுக்கு பிரபலமான நகரம் உல்ளது,. வன்முறை பரவியதும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சாலைகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு கலவரத்தை ஒடுக்க நடத்த துப்பாக்கிச்சூட்டில் குண்டடிபட்டும், கலவரத்தில் சிக்கியும் இரு நபர்கள் உயிரிழந்தனர். இதனால் போலீசாருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்துள்ளன. ஜூன் 12ம்தேதி உலககோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் தொடங்க உள்ளது. அதை காண உலகமெங்குமிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரேசில் நாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த கலவரம் கால்பந்தாட்ட ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்