முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் ரோபோ தயாரிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப் 25 - பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியிருப்பவர்களை காக்கும் புதுவித ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் உருவாக்கி உள்ளது. 

இது பார்ப்பதற்கு ஹாலிவுட் படமான டெர்மினரேட்டரில் வரும் ரோபோ போன்ற உருவத்தில் உள்ளது. ஆறடி 2 இன்ஞ் உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு அட்லஸ் என பெயரிட்டுள்ளனர். இது பூகம்பத்தின் போது இடிபாடுகளுக்குள் சென்று அதில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வெளியே கொண்டு  வரும் திறன் படைத்தது. அதே போன்று சுனாமியின் போது ஜப்பான் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்டது போன்ற விபத்திலும் இந்த ரோபோவை பயன்படுத்த முடியும். இது துணிச்சலாக உள்ளே புகந்து சிக்கியவர்களை மீட்டு வரும். இந்த ரோபோவை தயாரித்த தர்பா தொழில்நுட்ப நிறுவன தலைவர் பிராக்டர் உல்சிலே இதனை தெரிவித்தார். இதனிடையே பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் அட்லஸ் ரோபோவை அமெரிக்க ராணுவ மந்திரி பெண்டகன் சென்று நேரில் பார்த்தார். அதன் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்