Idhayam Matrimony

டெல்லியில் ஆட்சி அமைப்பது பற்றி ராஜ்நாத் ஆலோசனை

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை.22 - டெல்லியில் ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயா, சுமார் ஒரு மணி நேரம் விவாதித் தார்.

இது தொடர்பாக சதீஷ் உபாத் யாயா கூறியதாவது: டெல்லியில் ஆட்சியமைக்க அழைக்கப்பட் டால், அதை ஏற்பதா, மறுப் பதா என்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். ஆட்சியமைக்கக் கோரி இதுவரை அழைப்பு வரவில்லை. எது நடந்தாலும் அது அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே நடக்கும். ஆட்சியமைப்பதற்கான பரிந்துரை வந்தால், அதுகுறித்து முடிவு செய்வோம். பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான எண்ணிக்கை பற்றி, ஆட்சியமைக்க அழைப்பு வந்த பின்னரே கட்சி அறிவிக்கும், என்றார்.

மீண்டும் தேர்தலைச் சந்திக்க பல எம்எல்ஏக்கள் தயங்குவதாக, ராஜ்நாத் சிங்கிடம் சதீஷ் உபாத்யாயா கூறியதாகத் தெரிகிறது. இருப்பினும் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ஆட்சி யமைக்காமல் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் டெல்லியின் 60 சட்டசபைத் தொகுதிகளில் பாஜக முதலிடம் பிடித்ததை மூத்த தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

உபாத்யாயா கூறும்போது, "நாளையே தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள கட்சி முழு அளவில் தயாராக உள்ளது. டெல்லியில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறுவோம் என்பதில் நம்பிக்கை யுடன் உள்ளோம்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்