முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றங்கள் அதிகரிப்பு: பெங்களூர் போலீஸ் கமிஷனர் மாற்றம்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்: ஜூலை 22 - பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்ததன் எதிரொலியாக, நகர போலீஸ் கமிஷனர், சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகர போலீஸ் கமிஷனராக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி, எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி வளாகத்திலேயே, 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது, கூடுதல் கட்டணம் கொடுக்க மறுத்ததற்காக ஆட்டோ டிரைவரால் நடுரோட்டில் பெண் தாக்கப்பட்டது, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வந்த கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் காரில் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, கன்னியாஸ்திரி பயிற்சி பள்ளிக்குள் புகுந்து கன்னியாஸ்திரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது போன்ற சம்பவங்களால் நகரமே கொந்தளித்துப்போயுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களை கண்டித்து சட்டசபையில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு துணியுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தன. பெண்கள் அமைப்பு, மாணவர் அமைப்புகளும் பெங்களூர் வீதிகளில் தினமும் போராட்டம் நடத்திவருகின்றன. பெங்களூர் நகரில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், உள்துறை அமைச்சர் ஜார்ஜ் பதவி விலக கோரிக்கைகள் வலுத்தன.

இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, போலீஸ் அதிகாரிகளின் பணியிடமாற்ற பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போதைய கமிஷனர் ராகவேந்திர அவுராத்கர், மாநில ரிசர்வ் போலீஸ் படையின் கூடுதல் டிஜிபியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகர புதிய போலீஸ் கமிஷனராக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றும் எம்.என்.ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகர சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக பணியாற்றும் கமல்பந்த், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் மனித உரிமை பிரிவுக்கான ஐஜிபியாக நியமிக்கப்பட்டு, அந்த பதவியில் இருந்த அலோக் குமார், பெங்களூர் நகர சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவின் ஏடிஜிபியாக இருந்த கிஷோர் சந்திரா, பெங்களூர் நகர சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago