முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை 22 - தமிழக முதல்வர் ஜெயலலிதா தென்மாவட்ட ஜீவாதார பிரச்சினையான முல்லை பெரியாறு பிரச்சனையில் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த 2002 ஆண்டு முதல் கடுமையாக சட்டப்போராட்டத்தின் மூலம் போராடி அதில் 7.5.2014 அன்று முல்லை பெரியாறு அணை மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்று அதனடிப்படையில் 17.7.2014 அன்று முல்லை பெரியாறு அணை மதகுகள் அடைக்கப்பட்டு 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 37 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாத நீதியை பெற்று தந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரது தொடர் போராட்டத்தினால் கிடைத்த இமாலய வெற்றி என்று மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு புகழாரங்களை சூட்டி வருகிறார்கள். இந்த மாபெரும் வெற்றியைத் தந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகளின் சார்பில் மாபெரும் பாராட்டு விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணியினை செய்து வருகின்றனர்.

இதனையொட்டி மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முல்லை பெரியாறு பிரச்சனையில் மாபெரும் வெற்றியை தந்திட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியினை காணிக்கையாக்கும் வகையில் மாபெரும் நன்றி அறிவிப்பு கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ம. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் ஆர். சுந்தர்ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்த கூட்டத்தில் மதுரை மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், ஆர். கோபாலகிருஷ்ணன் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர்கள் க. தவசி, எம்.எஸ். பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. போஸ், கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தர்ராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர். ராஜாங்கம், உசிலை. இ. மகேந்திரன், அ.ம. பரமசிவம், சீனிவேல், பாண்டியம்மாள் மதுரை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் புதூர் கே. துரைப்பாண்டியன், சி. தங்கம், ஜெ. ராஜா மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஐயப்பன், பஞ்சவர்ணம், அம்பலம் பகுதி கழக செயலாளர்கள் பெ. சாலைமுத்து, வி.கே.எஸ். மாரிச்சாமி, ஏ.கே. முத்துஇருளாண்டி, எம். ஜெயபால், ஷ. ராஜலிங்கம், எம்.என். முருகன், செ. புூமிபாலன், பி.எஸ். கண்ணன், தளபதி மாரியப்பன் ஒன்றிய கழக செயலாளர்கள் தக்கார்பாண்டி, கே. முருகேசன், அன்பு கே.சி. மாயன், சௌந்தரபாண்டி, செல்லபாண்டி, மகாலிங்கம், ராமசாமி, வெற்றிசெழியன், சௌடார்பட்டி பாண்டி, ஏ. ரவிச்சந்திரன் நகர் கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், ராமமூர்த்தி, சரவணன், ஜே.டி. விஜயன் தொகுதி கழக செயலாளர்கள் எஸ். முருகேசன், கிரம்மர் சுரேஷ், எம். இளங்கோவன், ஆண்டிச்சாமி, பெரியபுள்ளான், மாவட்ட அணி நிர்வாகிகள் எஸ்.டி. ஜெயபாலன், கா. டேவிட் அண்ணாதுரை, இந்திராணி, ராஜீவ்காந்தி, வினோத்குமார், தமிழ்செல்வன் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் வேலுச்சாமி, திருப்பதி, எஸ். முருகன் முன்னாள் கழக அமைப்புச் செயலாளர் எஸ்.என். ராஜேந்திரன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ஜி.என். அன்புசெழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் சுந்தர்ராஜ் பேசியதாவது, அம்மா அவர்கள் காவேரி பிரச்சனையில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தமிழக ஜீவாதார உரிமையை நிலைநாட்டினார்கள். அதுபோல் முல்லை பெரியாறு பிரச்சனையில் 37 ஆண்டுகள் கிடைக்கப்பெறாத நீதியை பெற்றுத் தந்து மாபெரும் சாதனையை அம்மா அவர்கள் படைத்துள்ளார்கள். இதுமட்டுமல்லாது மீனவர் சமுதாயத்திற்கு பாதிப்பு என்றாலும் குரல் கொடுப்பவர் அம்மா அவர்கள் தான். சமீபத்தில் ஈராக் நாட்டில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களை மீட்டு நிவாரணம் வழங்கியவர் அம்மா அவர்கள் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,

முதல்வர் அம்மா அவர்கள் தமிழக ஜீவாதார உரிமைகளை எல்லாம் மீட்டு தமிழகத்தை காத்து வருகிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனை 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகும். கேரள அரசு முதல்வர் அம்மா அவர்கள் பெற்றுத் தந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் சர்வாதிகாரமாக இருந்தது. ஆனால் அம்மா அவர்கள் தொடர்ந்து சட்டப்போராட்டத்தின் மூலம் இன்று அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த மீண்டும் தீர்ப்பினை பெற்று அதை இன்று நடைமுறைப்படுத்தி 37 ஆண்டுகள் கிடைக்காத தீர்ப்பினை அம்மா அவர்கள் பெற்றுள்ளார்கள். நமக்கு ஒரு சொட்டு தண்ணீர் வழங்கினாலும் அதை நாம் ஆயுள் முழுவதும் மறக்கக்கூடாது என்பது பழமொழி. ஆனால் அம்மா அவர்கள் நம் ஆயுள் முழுவதிற்கும் தண்ணீரை வழங்கியுள்ளார்கள். இதை நாம் ஆயுள் முழுவதும் மறக்கக்கூடாது. ஆனால் முல்லை பெரியாறு பிரச்சனையில் கருணாநிதி என்ற தீயசக்தி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். சென்ற திமுக மைனாரிட்டி ஆட்சியில் முல்லை பெரியாறு பிரச்சனைக்காக மதுரையில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். ஆனால் அவரின் குடும்பத்தார்கள் வேண்டுகோளுக்கிணங்க அதை அப்படியே கிடப்பில் போட்டு மாற்றி கேரளா அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். அதற்கும் அவர் குடும்பத்தார் தடுத்தனர். அதனடிப்படையில் மாநிலங்களுக்குள் சுமூக உறவு வேண்டுமென்று கூறி அதை அப்படியே போராட்ட மறுத்து விட்டார். ஆனால் இன்று அம்மா அவர்கள் மத்தியிலும் சரி, மாநிலங்களுக்குள் சரி, சுமூக உறவை வைத்துக்கொண்டு இன்று முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்;த்து வைத்துள்ளார்கள். அதன்படி இன்று கிடைத்துள்ள முல்லை பெரியாறு பிரச்சனை மூலம் காலங்காலமாக அம்மா அவர்கள் பெற்றுத்தந்த தீர்ப்பினை சொல்லிக்கொண்டே போகும். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத் தந்த அம்மா அவர்களுக்கு 5 மாவட்ட விவசாய பெருமக்கள், பொதுமக்கள் அனைவரும் அம்மா அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது,

தமிழகத்தில் பசி, பட்டினி அறவே இருக்கக்கூடாது என்ற உயர்ந்த சிந்தனையில் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து வரும் முதல்வர் அம்மா அவர்களின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இன்று முல்லை பெரியாறு பிரச்சனையில் அம்மா அவர்கள் பெற்றுத் தந்த தீர்ப்பினை கண்டு 5 மாவட்ட விவசாயிகள் அம்மா அவர்களுக்கு தினந்தோறும் நன்றியினை தெரிவிக்கும் வண்ணம் வருகின்றனர். இனி வருங்கால சந்ததியினர் எல்லாம் அம்மா அவர்களின் புகழை பாடிக் கொண்டே இருப்பார்கள். இதே முல்லை பெரியாறு பிரச்சனைக்காக மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முதல்வர் அம்மா அவர்கள் நடத்தினார்கள். அப்போது அம்மா அவர்கள் மதுரைக்கு வரக்கூடாது என்று 19 கொலை மிரட்டல்களை அம்மா அவர்களுக்கு விடுத்தனர். அதுமட்டுமல்லாது அழகிரியும் அம்மாவை மறைமுகமாக மிரட்டினர். ஆனால் அம்மா அவர்கள் தன் உயிரை துச்சமென மதித்து தென்மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையான முல்லை பெரியாறு பிரச்சனைக்காக மதுரை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வேன், என் உயிரைப் பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறி மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி நிச்சயம் நான் ஆட்சிக்கு வருவேன். வந்தவுடன் முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்ப்பேன் என்று சபதம் போட்டார் அம்மா அவர்கள். அந்த சபதத்தை அம்மா அவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் இன்று கருணாநிதி ஆட்சி இருந்திருந்தால் முல்லை பெரியாறு நமக்கு கிடைத்திருக்காது ஏன்? குடிக்கத் தண்ணீர் நமக்கு கிடைக்காது. 37 ஆண்டுகள் தீர்க்கப்படாத முல்லை பெரியாறு பிரச்சனையில் நமக்கு தீர்த்து வைத்த அம்மா அவர்களுக்கு நம் குடும்ப சந்ததியினர் அனைவரும் முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தி 5 மாவட்ட விவசாயிகள், 5 மாவட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய அம்மா அவர்களின் வரலாற்றை இனி வரும் காலங்களில் மக்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் தமிழக முதல்வர் தென்மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையான முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் 2002-ம் ஆண்டு முதல் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி அதன் மூலம் 07.05.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்று தந்து, தொடர்ந்து 03.06.2014 அன்று பாரதப்பிரதமரை நேரில் சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் மூவர் குழுவை அமைக்க வலியுறுத்தி அதனை தொடர்ந்து 08.07.2014 அன்று மூவர் குழு அமைக்கப்பட்டு இதன்மூலம் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 17.07.2014 அன்று மதகுகள் அடைக்கப்பட்டு அதன் மூலம் 136 அடியிலிருந்து 142 அடியாக அணை நீர்மட்டம் உயர்த்தப்பட்டு கடந்த 37 ஆண்டுகளாக தீர்க்க முடியாத தமிழக ஜீவாதார பிரச்சனையை தீர்த்து வைத்து இதன்மூலம் தமிழக விவசாய பெருங்குடிமக்களுக்கு மாபெரும் நீதியினை பெற்றுத தந்த விவசாய மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இக்கூட்டம் கோடான கோடி நன்றியினை தெரிவிப்பதோடு ஐந்து மாவட்ட விவசாய பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக முதல்வர் அம்மாவை அழைத்து நன்றி தெரிவிக்கும் மாபெரும் பாராட்டு விழாவை மாமதுரையில் நடத்துவதற்கு முதல்வர் அம்மாவின் பொற்பாதம் பணிந்து அனுமதி வேண்டி இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago