முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஜி அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      ஊழல்
Image Unavailable

 

பெல்லாரி, ஜூலை 24 - சுரங்க ஊழலில் சிக்கி கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது.

கர்நாடகாவில் பாஜ தலைவர் எடியூரப்பா முதல்வராக இருந்த போது சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு கர்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபுரியில் சொந்தமாக ஏராளமான இரும்பு தாது சுரங்கங்கள் உள்ளன. இதில் இரும்பு தாதுக்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக கடந்த 2011ல் இவரை சிபிஐ கைது செய்து சிறையில்

அடைத்தது. இந்த ஊழல் தொடர்பாக இதுவரை மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 37 மாதங்களாக சிறையில் உள்ள இவரது ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றம், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஜனார்த்தனரெட்டி சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தத்து தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் 6 மாதத்துக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்