முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டம்: ரோஜா பங்கேற்பு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, ஜூலை.25 - ஆந்திராவில் தேர்தலின் போது நிபந்தனையின்றி விவசாயிகள், மகளிர் குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கடனை தள்ளுபடி செய்யபல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளார்.

இதேபோல் மகளிர் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வேன் என்று கூறிய அவர் தற்போது ஒரு குழுவுக்கு ரூ.1 லட்சம் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். வாக்குறுதிகளை அள்ளி வீசி மோசடி செய்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஒயஎஸ்ஆர் காங்கிஸ் சார்பில் ஆந்திரா முழு வதும் 3 நாள் போராட்டம் நடைபெறும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். நரகாசுரனை வதம் செய்வது போல சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மைகளை எரித்து கண்டனம் தெரிவிக்கும்படி கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டார்.

இதன் படி மாநிலம் முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினார்கள். அனைத்து கிராமங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. நகரியில் நடந்த போராட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா கலந்து கொண்டார். அவருடன் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். போராட்டத்தின் போது சந்திரபாபு நாயுடு கொடும் பாவியை எரித்தனர்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் நடத்தி சந்திரபாபு நாயுடு அரசுக்கு நெருக்கடி கொடுப்போம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago