முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத் மாநில மாநாடு: வேதாந்தம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஜூலை 29 - ஓசூரில் டிசம்பர் 28ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்று அதன் நிறுவன தலைவர் வேதாந்தம் தெரிவித்தார்.

திருச்சியில் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நிறுவன தலைவர் வேதாந்தம் தலைமை வகித்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தொடர்ந்து பல ஆண்டுகளாகவே அரசும், அரசியல்வாதிகளும் இந்துக்களின் உணர்வுகளை புறக்கணித்து வருவது கவலையளிக்கிறது. சிறுபான்மை இனத்தவரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் பிரமுகர்கள், இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. அதே போல இந்துக்களுக்கு பண்டிகை கால சிறப்பு திட்டங்கள் எதையும் செயல்படுத்துவதும் கிடையாது. பெரும்பான்மையான சட்ட திட்ட விதிமுறைகளுக்கு எதிராகவே உள்ளன. இந்துக்களின் வாக்கு வங்கி முறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்துக்களுக்கு எதிரான முடிவுகளை எடுக்கும் அரசு மற்றும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க கூடாது. அப்போதுதான் பெரும்பான்மை மக்கள் குறித்த அக்கறை வரும். நாளை நமதே என்ற தலைப்பின் கீழ் டிசம்பர் 28ம் தேதி ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்துக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டு உரிய தீர்வு கிடைக்க வழி வகை செய்யப்படும். இதே போல் பூக்கட்டுவோர் பேரவையின் முதல் மாநில மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறுகிறது. இவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் நலத்திட்ட உதவிகளை பெற்று தரும் வகையில் இந்த மாநாடு அமையும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago