முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ வீரரின் மனைவி தொடுத்த வழக்கில் கோர்ட் கண்டனம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை 29 - மகராஷ்டிர மாநிலம் ரத்னகிரி பகுதியில் ராணுவ வீரரின் விதவை மனைவி இந்திரா யாதவுக்கு அரசு நிலம் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை 40 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு அந்த மாநில அரசை மும்பை ஐகோர்ட் கண்டித்தது.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரருக்கு அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் நிலம் ஒதுக்க வேண்டும் என்று ராய்கட் மாவட்ட கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் தவறினால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

நீதிபதிகள் மேலும் கூறுகையில், மனுதாரருக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்குள் நிலம் ஒதுக்கப்படாதது கண்டறியப்பட்டால் 6 இலக்க தொகையில் அபராதம் விதிக்கக்கூடிய அளவுக்கு தகுதியான வழக்கு இது. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் ராணுவ அதிகாரிகளின் பரிந்துரை கடிதத்தை கொடுத்து இந்திரா யாதவ் நிலம் ஒதுக்கீடு கேட்டுள்ளார். 1971ல் அவருக்கான நிலம் ஒதுக்கப்பட்ட போதிலும் அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பை இந்திராவிடம் அரசு கோரியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்