முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் எம்பிக்களுக்கு ஓய்வூதியம் உயர்கிறது

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 29 - பாராளுமன்றத்தில் எம்பியாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது கொண்டு வந்தார். அப்போது மாதம் ஒன்றுக்கு முன்னாள் எம்பிக்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.

இந்திராகாந்தி இந்த திட்டத்தை கொண்டு வந்த போது 5 ஆண்டுகள் எம்பியாக இருந்தவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. வாஜ்பாய் பிரதமரானதும் அந்த ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்து எம்பிக்களாக பதவி ஏற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்தார்.

கடந்த 2009ம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் முன்னாள் எம்பிக்களுக்கான ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்தினார். இதனால் தற்போது மாதந்தோறும் முன்னாள் எம்பிக்கள் தலா ரூ. 20 ஆயிரம் ஓய்வூதியமாக பெற்று வருகிறார்கள். முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட மத்திய அரசு முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தை 75 சதவீதம் உயர்த்த முன்வந்துள்ளதாக தெரிகிறது.

அது மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்படும் பட்சத்தில் முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 35 ஆயிரமாக உயரும். அது போல 5 ஆண்டுகளுக்கு மேல் எம்பிக்களாக இருந்தவர்களுக்கு ஒவ்வெரு ஆண்டும் கூடுதல் ஓய்வூதியமாக மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தொகை ரூ. 1500ல் இருந்து ரூ. 2 ஆயிரமாக உயரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்