முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 வழிச்சாலையாக்க நிதி ஒதுக்கீடு: நன்றி தெரிவித்து தீர்மானம்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 1- மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள உள்வட்ட சாலையை 4 வழிச்சாலையாக மாற்றியமைக்க ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மதுரை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையளார் சி.கதிரவன், துணைமேயர் கு.திரவியம், மண்டலத் தலைவர்கள் பெ. சாலைமுத்து, கே. ராஜபாண்டியன், கே. ஜெயவேல், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்களை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா நிறைவேற்றினார்.

தீர்மானம் - 1

தமிழக முதல்வர் அம்மா வருங்காலத் தூண்களான இளைய சமுதாயத்தின் சாதனையை உலகறிய செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து குறிப்பாக இளைஞர்கள் பங்கேற்கும் விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய ஆக்கத்தையும், ஊக்கத்தையும் அளித்து செயல்படுத்தி வருகிறார்கள். இதனையொட்டி கடந்த 2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத்தில் ஒலிம்பிக்கில் தங்கம் பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடியும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ரூபாய் 50 லட்சமும் வழங்கப்படும் என்று மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்தார்கள். அதன்படி ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் என்பவர் 77 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றமைக்கு தாயுள்ளத்தோடு தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் பொருட்டு சதீஷ் சிவலிங்கம் என்ற விளையாட்டு வீரருக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு இம்மாமன்றம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 2

தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் தமிழக முதல்வர் அம்மா அவர்கள், மதுரை உட்பட ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சனையான முல்லை பெரியாறு அணை பிரச்சனையில், 2002-ம் ஆண்டு முதல் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, அதன்மூலம் 7.5.2014 அன்று உச்சநீதிமன்றத்தில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை பெற்றுத்தந்து, தொடர்ந்து 3.6.2014 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்துகின்ற வகையில் மூவர் குழுவை அமைக்க வலியுறுத்தி, அதனைத் தொடர்ந்து 8.7.2014 அன்று மூவர் குழு அமைக்கப்பட்டு, இதன்மூலம் முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், 17.7.2014 அன்று மதகுகள் அடைக்கப்பட்டு, அதன்மூலம் 136 அடியிலிருந்து 142 அடியாக அணை நீர்மட்டத்தை உயர்த்தி, கடந்த 37 ஆண்டுகளாக தீர்க்க முடியாத, தமிழக ஜீவாதார பிரச்சனையை தீர்த்து வைத்து, இதன்மூலம் தென்மாவட்ட மக்களுக்கு மாபெரும் நீதியினை பெற்றுத்தந்த, தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மாமன்றக் கூட்டம் மதுரை மாவட்ட மக்களின் சார்பில், பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 3

வரலாற்று தொன்மைமிக்க முச்சங்கம் அமைத்து, முத்தமிழ் வளர்த்த மூவா புகழ் மதுரைக்கு, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் மதுரை மாநகராட்சி பகுதிகளான, மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலிருந்து கப்பலூர் வரை உள்ள 27 கிலோ மீட்டர் உள்வட்ட சாலையை (ரிங் ரோடு) நான்கு வழிச் சாலையாக அமைக்க ரூபாய் 200 கோடியை ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து தென்னகத்தின் ஏதேன்ஸ் மாமதுரைக்கு நிதியினை அள்ளி அள்ளித் தரும், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மான்ற கூட்டம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் - 4

மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக, கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு வரலாற்று திட்டங்களை வாரி வழங்கியது மட்டுமல்லாது, சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, அதன் மூலம் தமிழக மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திவரும், தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் புனித மக்கள் பணியினை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கண்ணியமிக்க சபையாக விளங்கும் சட்டமன்றத்தில், மக்கள் பணியாற்றாமல், மாறாக ஜனநாயகத்தை பாழ்படுத்தும் வகையில், பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுவரும், தமிழக மக்களின் பொது ஜன விரோதி, எதிர்கட்சியாக இருக்க தகுதியற்ற, பண்பாட்டை காப்பாற்ற தெரியாத கருணாநிதியையும், கருணாநிதி மகன் ஸ்டாலினையும் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் இம்மாமன்றக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் - 5

நடப்பாண்டில் இளங்கோவடிகளின் புதிய காப்பியம் படைப்பவருக்கு அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவருக்கு, ஆண்டுதோறும் சித்திரை திங்கள் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளின் பெயரில் புதிய விருதுகள் வழங்கப்படும் என்றும், இதற்காக ஒரு இலட்சம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும் என்று தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் அறிவித்து, இதனைத் தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தையும், தமிழ் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்திற்கும் பாதுகாப்பு அரணாக விளங்கிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, இம்மாமன்றக் கூட்டம் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்களை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா நிறைவேற்றும் போது அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தும் வாழ்த்தியும் பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago