முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமுதியில் சூரியசக்தி மின் சக்தி துணை நிலையம்: முதல்வர்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1-நுகர்வோருக்கு சீரான மின்சாரம் கிடைப்பதற்கு வசதியாக ரூ.660 கோடி செலவில் 28,000 மின் வினியோக மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்..

சூரியசக்தி மின் சக்தியை மின் தொடர் அமைப்பில் சேர்ப்பதற்காக கமுதி மற்றும் முத்துராமலிங்கபுரத்தில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். நடப்பு நிதியாண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:தமிழ்நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சூரிய மின் சக்திக் கொள்கையை நான் 20.10.2012 அன்று வெளியிட்டேன். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 102 மெகாவாட் நிறுவுத் திறன் கொண்ட 49 சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 708 மெகாவாட் அளவிற்கு சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய தொழில் முனைவோருக்கு இசைவுக் கடிதங்களை வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டப்படும் 60,000 பசுமை வீடுகளுக்கு சூரிய மின் சக்தி வசதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 20,000 தெரு விளக்குகள் சூரிய மின் சக்தி வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமையகத்தில், மேற்கூரையில் அறுபது கிலோவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையத்தை 30.12.2013 அன்று நான் தொடங்கி வைத்தேன். வீட்டு மேற்கூரைகளில் சூரிய மின் சக்தி தயாரிக்கும் நிலையங்களை நிறுவுவதற்காக ஒரு கிலோவாட் சூரிய மின் சக்தி நிறுவுத் திறனுக்காக 20,000 ரூபாய் மானியத்தை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதுவரை 1708 வீடுகளுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூரிய மின் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மின் தொடரமைப்பில் சேர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 400 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தில் 230 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும்.

மின் தொடரமைப்பை வலுப்படுத்து வது மட்டுமல்லாமல் மின் பகிர்மானக் கட்டமைப்பை செம்மைப்படுத்தினால் தான் நுகர்வோருக்கு

சீரான மின்சாரம் கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் 28,000 மின் விநியோக மாற்றிகள் 660 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்.

எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் மேலும் 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மக்கள் உயர்வுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என் பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago