முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கல்பட்டு அருகே மருத்துவ பூங்கா: முதல்வருக்கு பாராட்டு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1 - செங்கல்பட்டு அருகே 330 ஏக்கர் பரப்பில் மருத்துவ பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர்ஜெயலலிதாவுக்கு மன்ற கூட்டத்தில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வரலாறறில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்கும் காலங்களில் எல்லாம்- ஏற்படுத்தப்படும் தொழில் கட்டமைப்பு வசதிகள்- தொழில்நுட்ப தகுதியுடன் கூடிய மனித வளம், தடையில்லா மின்சாரம், அமைதியான சட்டம்-ஒழுங்கு- வெளிப்படையான முறையில் எளிமையான அணுகுமுறை- போன்ற தொழில் தொடங்கத் தேவையான, சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்-.

அதுபோல்- தற்போது மூன்றாம் முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற உடன்- இலக்குகளுடன் கூடிய தொலை நோக்குத் திட்டம் 2023-, தமிழ்நாடு தொழில் கொள்கை 2014, மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014-, உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவற்றை வடிவமைத்து உலகுக்கே முன்னுதாரனமாக திகழ்ந்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் இந்திய அளவில் ஏன் உலகளவிலும் கூட மருத்துவத்துறையின் தலைநகராக வருவதற்கு ஆற்றிவரும் அரும்பணி அளவிடமுடியாத ஒன்று.

இதன் உச்சக்கட்டமாக- மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் துறையில் இந்தியாவின் மையமாக தமிழ்நாட்டினை உருவாக்கும் பொருட்டும்- மருத்துவ தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டும்- மருத்துவ தொழில்நுட்பத் தயாரிப்புகளின் இறக்குமதியை குறைத்து- அதன் மூலம் மருத்துவச் செலவைக் குறைக்கும் நோக்கிலும்- எச்.எல்.எல். லைகேப் லிமிடெட் என்கிற ஓர் இந்திய அரசு நிறுவனத்துடன் இணைந்து- காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் 330 ஏக்கர் நிலபரப்பில்- 130 கோடி ரூபாய் திட்ட செலவில்- ஒரு மருத்துவப் பூங்கா டிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்படும்- என்பதையும் இந்த மருத்துவக் பூங்கா இந்திய நாட்டில் முதன்மையான மருத்துவப் பூங்காவாக அமைவதோடு- மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் மண்டலம் உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவல் மண்டலம்- அடைகாப்பு வசதி மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி- மண்டலம் போன்ற உட்கட்டஅமைப்பு வசதிகள் கொண்டதாகவும்- அமையும்-.

இப்பூங்காவில் அமைக்கப்பட வுள்ள 100 தொழில் பிரிவுகளில்- 30 தொழில் பிரிவுகள் பெரிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக அமைக்கப்படும்-. இத்திட்டத்தின் மூலம் சுமார் 3000 நர்பளுக்கு நேரடி வேலைவாய்ப்பும்-, சுமார் 5000நபர்களுக்கு மறைமுகவேலை வாய்ப்பும் ஏற்படும் என அறிவித்துள்ளார்.- பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும்- இத்தகைய அறிவிப்பை -சென்னையில் வாழும் 1 கோடி மக்களுக்கும் தமிழக முழுமையிலும் உள்ள ஏழரை கோடி மக்களுக்கும் மருத்துவத்துறையில் மிகப்பெரும் பயனை அளிக்க உள்ள இத்திட்டத்தினை- வழங்கிய தமிழக முதல்வருக்கு இம்மான்றம் தனது பெருத்த கரவொலி மூலம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்