முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4.65 கோடி பேருக்கு அடையாள அட்டை: அமைச்சர் தகவல்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1 - தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், தனி நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட அடையாள அட்டை இதுவரை 4.65 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சரத்குமார் எம்.எல்.ஏ. (தென்காசி) எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 5 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 கோடியே 74 லட்சத்து 18 ஆயிரத்து 619 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கருவிழி படலம், கைவிரல் பதிவுகளைக் கொண்ட பயோ-மெட்ரிக் அடிப்படையில் 4 கோடியே

91 லட்சத்து 54 ஆயிரத்து 640 பேரின் விவரங்கள் (அதாவது 72.99 சதவீதம் பேர்) சேகரித்து கணக்கெடுக்கும் பணி முடிந்துள்ளது. அவர்களில் இதுவரை 4 கோடியே 65 லட்சத்து 11 ஆயிரத்து 709 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்