முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் பட்டியில் துவங்கியது

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஆக.21 - பிள்ளையார் பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் 10 நாள் விழா துவங்கியது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் 10 நாள்விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று காலை சுமார் 9மணிக்கு மேல் கற்பக விநாயகருக்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அதன் அருகே வேல் வைத்து பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 9.45 அளவில் கொடியேற்றப்பட்டது. உற்சவ கற்பக விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரண்டாம் நாளான இன்று முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் திருவீதி உலா நடைபெறும். இன்று இரவு சுவாமி சிங்க வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். மூன்றாம் திருநாளான நாளை இரவு சுவாமி பூத வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். நான்காம் திருநாளான நாளை மறுநாள் இரவு கமல வாகனத்தில் நடைபெறும். 5ம் நாளான ஆகஸ்ட் 24ம் தேதி இரவு சுவாமி இடபவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். 6ம் திருநாளான ஆகஸ்ட் 25ம் தேதி மாலை 6மணிக்கு கஜமுக சம்காரம் நடைபெறும். அன்று இரவு சுவாமி திருவீதி உலா நடைபெறும். 7ம் திருநாளான ஆகஸ்ட் 26ம் தேதி இரவு சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். 8ம் திருநாளான ஆகஸ்ட் 27ம்தேதி இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான ஆகஸ்ட் 28ம் தேதி காலையில் சுவாமி திருதேருக்கு எழுந்தருளல் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனகாப்பு அலங்காரத்தில் மூலவர் மாலை 4.30 மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். மாலை சுமார் 4மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். 10ம் திருநாளான ஆகஸ்ட் 29ம் தேதி காலையில் சுமார் 9மணியளவில் கோவில் முன்பு உள்ள குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். பகல் சுமார் 12 மணியளவில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறும். இரவு 11 மணியளவில் ஐம்பெரும் மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

இந்த விழாவிற்கான கோவில் பரம்பரை அரங்காவலர்கள் அ.முத்துபட்டினம் ந.நாச்சியப்ப செட்டியார், கண்டனூர் சிதநாச்சியப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago