முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரத்தில் போராட்டம்: கம்யூ. தொண்டர்கள் மீது தடியடி

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக 21:

கேரளாவில் சமீபத்தில் ஏராளமான பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியது. போதிய மாணவர்கள் இல்லாத பல தனியார் பள்ளிகளுக்கும், பிளஸ் 2 வகுப்பு தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் இதில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேலும் இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்று கேரள கல்வி மந்திரி அப்துரப் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் மந்திரி பதவி விலக கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தினார்கள். இந்த கட்சியின் இளைஞர் அமைப்பான ஏ.ஐ.ஒய்.எப் தொண்டர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்பை மீறி தலைமை செயலகத்திற்குள் நுழைய கம்யூனிஸ்டு தொண்டர்கள் முயன்றனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் 4 பேர் படுகாயமடைந்தனர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கேரள தலைமை செயலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்