முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கழிப்பறை கட்டிக் கொடுக்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக 21 - நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறை கட்ட நிதியுதவி செய்யுங்கள் என்றும், மாணவிகளுக்கு தனித்தனியே கழிவறையை கட்டிக் கொடுங்கள் என்றும் பெரிய நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். சுதந்திர தின விழாவின் போது அவர் இந்த அழைப்பை விடுத்தார். அன்றைய தினமே ஓரியண்டல் வர்த்தக வங்கி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக 200 கழிவறைகள் கட்ட ரூ. 2 கோடியை வழங்கியது. இதை தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் மாணவிகளுக்கு கழிவறை கட்டி கொடுக்க ஆர்வத்துடன் உள்ளன. தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டி.சி.எஸ்) நிறுவனம் மாணவிகளுக்கு கழிவறை கட்ட 10 ஆயிரம் பள்ளிகளில் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கூறும் போது, தலைமுறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், மாணவிகளுக்கு சுகாதாரமான கழிவறை வசதி செய்து தருவதன் மூலம் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதை கருத்தில் கொண்டும் இந்த நிதியுதவியை வழங்குகிறோம் என்றார். இதே போல பாரதி பவுண்டேசனும் ரூ. 100 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கழிவறையை கட்டி கொடுப்பதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்