முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி சட்டமன்ற குழு நிர்வாகிகள்: முதல்வர் அறிவிப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.21 - புதுச்சேரி சட்டமன்ற குழு நிர்வாகிகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியிருப்பதாவது:_
புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. குழு நிர்வாகிகளாகக் கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைவராக மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.புருஷோத்தமன்,
துணைத்தலைவராக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.அன்பழகன், கொறடாவாக நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர், பொருளாளராக நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் எல்.பெரியசாமி, செயலாளராக முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் எ.பாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்