முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலா பாதிப்பு: விமானங்களை இயக்க விமானிகள் மறுப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பாரீஸ, ஆக.21 - கினியா, நைஜீரியா போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் பலியாகி உள்ள நிலையில், அந்த நாடுகளுக்கு விமானங்களை இயக்க மாட்டோம் என்று ஏர் பிரான்ஸ் விமானிகள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

கினியா, சியர்ரா லியோனி மற்றும் நைஜீரியா போன்ற மேர்கு ஆப்பிகிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் பரவி வருகிறது. இந்த நாடுகளில் இதுவரை 1,229 பேர் பலியாகி உள்ளனர். எபோலாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில், பல்வேறு நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எபோலா பாதித்த நாடுகளில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் விமானங்கள் சேவையை ரத்து செய்து உள்ளன. தங்களது விமானப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில், எபோலாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கமாட்டோம் என பிரான்ஸ் விமானிகள் போர்கொடி தூக்கி உள்ளனர். இது தொடர்பாக, 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஏர்பிரான்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளனர்.

கினியா மற்றும் நைஜீரியாவுக்கு ஏர்பிரான்ஸ் விமானங்கல் தினந்தோறும் இயக்கப்படுகிறது. அத்துடன், சியர்ரா லியோனிக்கு வாரத்தில் 3 முறை விமான சேவை நடத்தி வருகிறது. ஏர்பிரான்ஸ் விமான ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சோபியா கோரின்ஸ் பாரீசில் கூறுகையில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நாங்கள் விமானங்களை ஓட்டி செல்வதால், எங்களுக்கும் எபோலா நோய் தாக்குதல் ஏற்படுமோ என்ற பயம் உள்ளது. எனவே, நாங்கல் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமானங்களை ஓட்ட மாட்டோம்.

எனவே, இப்பகுதிகளுக்கு ஏர்பிரான்ஸ் நிறுவனம் விமான சேவையை நிறுத்த வேண்டும், என்றார். இருப்பினும், கினியா, நைஜீரியாவுக்கு ஏர்பிரான்ஸ் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்