முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகனின் ரூ.863 கோடி சொத்துகளை முடக்க உத்தரவு!

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.21 - ஆந்திர முன்னாள் முதல்வர் ஒயே.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் மற்றும் அவரது கூட்டாளிகளின் ரூ.863 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜ சேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன். தற்போது ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவரது தந்தைமுதல்வராக இருந்த காலகட்டத்தில் பல தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலங்கள் குறைந்த விலைக்கு தாரை வார்க்கப்பட்டன. இதற்கு பிரதிபலனாக ஜெகன் மோகன் பங்குதாரராக மற்றும் உரிமையாளராக உள்ள நிறுவனங்களுக்கு தனியார் நிறுவனங்கள் நிதி உதவி செய்தன.

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ஐதராபாத் ஐகோர்ட் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. சிபிஐ வழக்கு பதிவு செய்து ஜெகன் மோகனை கைௌது செய்து சிறையில் அடைத்தது. சுமார் ஒரு ஆண்டு அவர் சிறையில் இருந்தார். பின்னர் சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதற்கிடையில் சட்டவிரேதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கப்பிரிவும் தனியாக ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு தொடர்ந்தது. அவரது சொத்துக்களை முடக்குவது தொடர்பாக கடந்த மாதம் அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம், ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகளின் ரூ.863 கோடி சொத்துக்களை முடக்குவது தொடர்பான அமலாக்கப்பிரிவின் உத்தரை உறுதி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்