Idhayam Matrimony

உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.22::வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்ப்பு,வருமாறு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருட்டு வீடியோ தடுப்புப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமார், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய குற்ற புலனாய்வு தனிப் பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த பாலசுப்பிரமணியன், வேலூர் மாவட்டம், குற்ற புலனாய்வுத் துறை தனிப் பிரிவில் சுருக்கெழுத்தராகப் பணிபுரிந்து வந்த ஜெயபிரகாஷ் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

மதுரை மாநகர் ஆயுதப்படை 6-ம் பிரிவில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜேம்ஸ்ராஜன் சாலை விபத்தில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த சரவணக்குமார் சோழபுரம் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட போது ரயில் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தூத்துக்குடி, எட்டையாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிந்து வந்தசங்கர்தேவ் சாலை விபத்தில் உயிரிழந்தார், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த நடராஜசிங், கடலூர், சேத்தியாதோப்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ராமலிங்கம், சென்னை பெருநகர காவல், சென்னை அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஞானமூர்த்தி ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த சாந்திராணி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த செய்திகளை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காவல் துறை ஆய்வாளர் சங்கர்தேவ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், பாலசுப்பிரமணியன், ராமலிங்கம், ஞானமூர்த்தி; தலைமைக் காவலர்கள் நடராஜசிங், சாந்திராணி; முதல்நிலைக் காவலர்கள் ஜேம்ஸ்ராஜன்,

சரவணக்குமார், சுருக்கெழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவலர்கள் மற்றும் சுருக்கெழுத்தர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்

 

 

 

.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்