முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த விசாரணையையும் சந்திக்கத் தயார்: உம்மன் சாண்டி

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஆக.31 - தன் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக எந்த விசாரணை யையும் எதிர்கொள்ளத் தயார் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு தொழிற்சாலையில் கழிவுநீர் வெளியேற்றத் திட்டம் அமைத்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் உம்மன் சாண்டிக்குப் பங்கிருப்ப தாகவும் கூறி ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து உம்மன் சாண்டி கூறியதாவது:- "எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடக் கூடாது என்று கருதி நான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அதையெல்லாம் தொழிலாளர் நலன் கருதிதான் செய்தேன்.

எந்த வகையான விசாரணை வேண்டுமானாலும் நடக்கட்டும். நான் என் முழு ஒத்துழைப்பையும் தருவேன். தவறு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும்.

1992ம் ஆண்டு பால்மோலின் வழக்கு மற்றும் சமீபத்தில் 'சோலார்' வழக்கு எனப் பல வழக்குகள் என் மீது தொடரப்பட்டபோது நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அப்போ தெல்லாம் நான் ராஜினாமா செய்திருந்தால் அது முட்டாள் தனமாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago