முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி இடைத்தேர்தல்: பா.ஜ.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை.செப்.3 - தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து விட்டது. உள்ளாட்சி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள பா.ம.க., ம.தி.மு.க. ஆகியவை பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் குறித்து பேசி வருவதாக, பா.ஜ.க. மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு ம.தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். அப்போது உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிக்க வைகோவிடம், தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வைகோ ம.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் என்று அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago