முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்த்திக் கவுடாவை காப்பாற்ற காங்.,கும் முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

பெங்களூர், செப்.15 - மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவைக் காப்பாற்ற போலீஸாரும் கர்நாடக அரசும் முயல்வதாக நடிகை மைத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னட நடிகை மைத்ரி கொடுத்த புகாரின் பேரில், கார்த்திக் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் முன்ஜாமீன் பெற்ற கார்த்திக், முதல் முறையாக‌ கடந்த வெள்ளிக் கிழமை அதிகாலை ஆர்.டி. நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஊடகங் களுக்கும் மைத்ரி கவுடாவின் வழக்கறிஞருக்கும் தெரிவிக் காமல் அவருக்கு ரகசியமாக‌ அம்பேத்கர் மருத்துவ கல்லூரி யில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை 8 மணிக்கு கார்த்திக் கவுடா ஆர்.டி.நகர் காவல் நிலை யத்துக்கு வருவதாக ஊடகங் களில் தகவல் கசிந்தது. அதனைத் தொடர்ந்து கன்னட தொலைக்காட்சிகள் காவல் நிலையத்துக்கு முன்பாக குவிந்தன. ஆனால் போலீஸார் அவரை ஜே.சி.நகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். இந்த தகவல் கிடைத்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தபோது, கார்த்திக் கவுடாவை போலீஸார் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகை மைத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது, "கார்த்திக் கவுடா மீதான புகாரில் ஆர்.டி.நகர் போலீஸார் என்னிடம் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மிகவும் வெளிப்படையாக நடந்தது. அப்போது கார்த்திக் கவுடாவிற்கும், எனக்குமான காதல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், கடந்த 2 நாட்களாக கார்த்திக் கவுடா விடம் போலீஸார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் கவுடாவிற்கு உதவும் வகையில் நடவடிக்கைகள் இருக்கின்றன. அரசும் போலீஸாரும் அவரை காப்பாற்றுகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்