முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் ரூ. 6 லட்சம் கோடி: சீனா முதலீடு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், செப் 16 - இந்தியாவில் ரூ. 6 லட்சம் கோடி அளவுக்கு சீனா முதலீடு செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் இந்திய பயணத்தின் போது வெளியிடப்பட இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தியாவில் கங்கையை தூய்மைபடுத்தும் திட்டம், அதிவேக ரயில் திட்டம் உள்ளிட்டவற்றில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என அந்நாடு அறிவித்தது. இந்நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 17ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின் போது இந்தியாவில் புல்லட் ரயில் திட்டம் போன்ற அதிவேக ரயில் திட்டங்கள், தொழில் பூங்காக்கள் போன்றவற்றில் முதலீடு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது போல குறிப்பிட்ட பகுதிகளில் ரயில்வேயை மேம்படுத்தும் பணிகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் சீனா கோரலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் மும்பை ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஜப்பான் நாடு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, பெங்களூர், மும்பை இடையே அதிவேக ரயில் திட்டங்களை நிறைவேற்ற சீனா முன்னுரிமை கொடுக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்