முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி ஒதுக்கீட்டில் கடமையை செய்தேன்: மன்மோகன்சிங்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப் 16:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைவரிசை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவை வெளியாகின. இந்த முறைகேடுகளை அப்போது தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த தணிக்கை அதிகாரி வினோத்ராய் அம்பலப்படுத்தினார். இவர் தனது வாழ்க்கை அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். இதில் அன்றைய பிரதமரின் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த புத்தகம் குறித்து நிருபர்களிடம் கூறிய வினோத்ராய், தற்போது மன்மோகன்சிங் நினைத்திருந்தால் 2 ஜி முறைகேடு நடக்காமல் தடுத்திருக்கலாம் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் மன்மோகன்சிங்கின் மகள் தமன்சிங் எழுதிய ஸ்டிரிக்ட்லி பெர்சனல் மன்மோகன்சிங் அண்ட் குர்சரண் என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அப்போது வினோத்ராய் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து மன்மோகன்சிங் கூறியதாவது,

நான் எனது கடமையை தான் செய்தேன். பிறர் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ. ராசா, 2வது முறையாக மத்திய மந்திரியாக்க மன்மோகன்சிங் விரும்பவில்லை. சோனியா காந்தியின் வற்புறுத்தல் காரணமாகத்தான் அவர் மீண்டும் மந்திரியானார். எனவே வினோத்ராய் தெரிவித்துள்ள கருத்துப்படி மன்மோகன்சிங்குக்கு கட்டளையிட்டவர் சோனியா காந்தி தான். எனவே அவர்தான் குற்றவாளி. இவ்வாறு சுப்பிரமணிய சாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்