முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பிறந்த நாள்: அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

   

சென்னை.செப்.16: : அறிஞர் அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா சர்பாக இ. மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நேற்று தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாத்துரையின் 106வது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி வெவ்வேறு இடங்களில் அண்ணாவின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.106-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு

மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளான நேற்று காலை (15.9.2014 - திங்கட் கிழமை), சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் சர்பாக, கழக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் P.H. . பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் திருமதி விசாலாட்சி நெடுஞ்செழியன், கழக அமைப்புச் செயலாளர் திருமதி ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத், முன்னாள் அமைச்சர் . பண்ருட்டி

. ராமச்சந்திரன், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளரும், தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவருமான J.C.D. பிரபாகர், எம்.எல்.ஏ.,

வட சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் . T.Gவெங்கடேஷ்பாபு, எம்.பி., உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.

புதுடெல்லி

இதேபோல் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 106-ஆவது பிறந்த நாளான நேற்று

(15.9.2014 - திங்கட் கிழமை), புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் சார்பாக, கழக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை, கழக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் .S. முத்துக்கருப்பன், கழக மக்களவை குழு கொறடா

K.N. ராமச்சந்திரன், கழக மக்களவை குழுப் பொருளாளர் R. வனரோஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago