முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூரிய சக்தி மின்சாரத்துக்கு புதிய கொள்முதல் விலை நிர்ணயம்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்.16 - தமிழக மின் வாரியம் சார்பில், தமிழகத்தில் உற்பத்தியாகும் சூரிய மின் சக்தியை வாங்குவதற்கான கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் 3,000 மெகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தனியாக சூரிய மின் சக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழக மின் வாரியத்துக்கு கிடைக்கும் 12,909 மெகாவாட் மின் நிறுவு திறனில், 109 மெகாவாட் அளவுக்கு சூரிய சக்தி மின் சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், சூரிய மின் சக்தி குறித்த கொள்முதல் கட்டண விவரத்தை, தொழில் நுட்ப ரீதியாக ஆராய்ந்து முடிவு செய்யுமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, மத்திய மின்சார தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தமிழக மின் வாரியம் மனு தாக்கல் செய்து, சூரிய சக்தி மின்சார கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தது. ஒழுங்கு முறை ஆணையம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன், பொதுமக்கள், மின் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதில் லார்சன் அண்ட் டூப்ரோ, ஜிஆர்டி, மோசர்பேர் போன்ற சென்னை, புதுடில்லி, ஹைதராபாத், ஜெய்ப் பூர், பெங்களூர் உள்ளிட்ட பல் வேறு மாநிலங்களின் நகரங்களில் செயல்படும் எரிசக்தி நிறுவனங்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தன.

இந்த மனுவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அக்‌ஷய் குமார், உறுப்பினர்கள் நாகல்சாமி மற்றும் ராஜகோபால் ஆகியோர் விசாரித்து, கடந்த 12-ம் தேதி, சூரிய மின்சக்திக்கான கொள்முதல் கட்டணத்தை நிர்ணயித்து, உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் படி, சோலார் போட்டோவோல்டெக் மின் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து, யூனிட் ஒன்றுக்கு 7.01 ரூபாய்க் கும், சோலார் தெர்மல் (சூரிய அனல் மின் சக்தி) நிறுவனங் களிடமிருந்து, யூனிட் ஒன்றுக்கு 11.03 ரூபாய்க்கும் மின்சாரம் கொள்முதல் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

இதில் போட்டோ வோல்டெக் மின் சக்திக்கு ஒரு மெகாவாட் தயாரிப்பு முதலீட்டு செலவாக 7 கோடி ரூபாயும், சோலார் தெர்மலுக்கு ஒரு மெகாவாட் தயாரிப்பு முதலீட்டு செலவாக 12 கோடி ரூபாயும் அனுமதிக்கப்பட்டுள்ளது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சூரிய மின் சக்தி கொள்முதல் செய்யப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் உற்பத்தியான மின்சாரம், செலவு செய்த மின்சார பட்டியலை கழித்து, அதற்கான கட்டணத்துக்கு உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் கிடைத்த 60 நாட்களில் மின் வாரியம் கட்டணம் செலுத்த வேண்டும். தாமதித்தால், மாதம் ஒன்றுக்கு ஒரு சதவீத கூடுதல் தொகை செலுத்த வேண்டும்.

காற்றாலை மின் நிலையத்தின ருக்கு வழங்கும் சலுகை போல், வீலிங் எனப்படும் சுழற்சி முறை சேமிப்புப் பயன்பாடு சலுகை ஒரு மாதத்துக்கு, சூரிய சக்தி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும். மின் தொகுப்பு பயன்பாடு, பராமரிப்பு, மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செலவுக்கு தனியாக, சூரிய சக்தி உற்பத்தி யாளர்கள், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி உரிய தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் மேற்கூரை சூரிய மின் சக்தி திட்டத்துக்கான கொள்முதல் கட்டண விவரம் தனியாக அறிவிக்கப்படும் என, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்