முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை-2014 நிறைவு விழா நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.16 – முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் மீது ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தும் வகையில் ``இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’’ எனும் இலக்கியம் தொடர்பான பயிற்சித் திட்டம் 2012-13ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு வார காலம் நடத்தப்பட்டுவருகிறது. இப்பயிற்சியில் கவிதை, கட்டுரை, பேச்சுக்கலை, புதினம், சிறுகதை, நாடகம், திறனாய்வு, நகைச்சுவை, அறிவியல் கட்டுரைகள் எழுதும் முறை மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர், தமிழில் பிழையின்றி எழுதுதல், தமிழ் மருத்துவம், ஊடகத்தமிழ், கணினித்தமிழ், மொழிபெயர்ப்பு, இணையத்தமிழ், திரைத்தமிழ், தற்கால இலக்கியம், மேடைத்தமிழ் போன்ற பல்வேறு பொருண்மைகளில் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வகையில் இவ்வாண்டு இப்பயிற்சிப் பட்டறை சென்னை, அடையாறு, இந்திரா நகரில் உள்ள இளைஞர் விடுதியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் அவர்களால் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டு 09.09.2014 முதல் 15.09.2014 வரை நடைபெற்றது.

இதன் நிறைவு நாளான 15.09.2014ஆம் நாளன்று முற்பகல் ‘அயலகத் தமிழ்’ எனும் தலைப்பில் பேராசிரியர் இலலிதா சுந்தரம் அவர்களும், ‘இலக்கியத்தில் நகைச்சுவை’ எனும் தலைப்பில் முனைவர் இளசை சுந்தரம் அவர்களும், `சுவடித் தமிழ்’ எனும் தலைப்பில் முனைவர் தி. மகாலட்சுமி அவர்களும் சிறப்புரையாற்றினர்.

பிற்பகல் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்புரையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் கா.மு. சேகர் முன்னிலையும் ஆற்றினர். கே.வைத்தியநாதன் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். மேலும் இப்பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவி செல்வி க. அபிதா, செல்வன் வே.து. வெற்றிச்செல்வன் ஆகியோர் பயிற்சிப் பட்டறை அனுபவங்கள் குறித்து கருத்துரையாற்றினார்கள். நிறைவாக, தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (நிருவாகம்) முனைவர் கோ. செழியன் நன்றியுரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்