முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி பங்கீடு சிக்கல் விரைவில் தீர்ந்துவிடும்: சரத்பவார்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.17 - மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு சிக்கல் ஓரிரு நாளில் தீர்ந்துவிடும் என சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தக் கூட்டணி பலத்த தோல்வியை தழுவியது. இதை தொடர்ந்து இந்த கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுகளில் பாதியை தேசியவாத காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என துணை முதல்வர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை கட்சி தலைவர் சரத்பவார் ஆமோதித்துள்ளார். பிரபுல் பட்டேல் போன்ற அடுத்த நிலை தலைவர்களும் பாதி இடம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

கடந்த 2009 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் 174 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிட்டது. இதே பார்முலா இந்த தேர்தலிலும் கடைபிடிக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த பார்முலாவை ஏற்றுக் கொள்ள விட்டால் தனித்து போட்டியிட தயார் என காங்கிரஸ் முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர்கள் ஏ.கே.அந்தோணி மற்றும் அகமது பட்டேல் அடங்கிய உயர்மட்டக்குழுவை சோனியா நியமித்துள்ளார். இவர்கள் இரண்டு முறை தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துயுள்ளனர். இருப்பினும் தொகுதி பங்கீடு சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு சிக்கல் முடிவுக்கு வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோலாபூரில் அவர் கூறுகையில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க விரும்புகிறோம். தொகுதி பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார். தொகுதி பங்கீடு விஷயத்தில் சரத்பவாரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அஜித்பவார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்