முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல் தலைக்கு ரூ.2.67 கோடி: மத்திய - மாநில அரசுகள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.17 - நக்சல் இயக்க தலைவர் கணபதி தலைக்கு மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ரூ.2.67 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளன.

ஆந்திரா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட 9 மாநிலங்களில் நக்சல் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த மாநிலங்களில் மாநில போலீசாருடன், மத்திய போலீசாரும் இணைந்து நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் இயக்கத்தின் முக்கிய தலைவராக கருதப்படும் லட்சுமணன் ராவ் என்ற கணபதி பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் தரப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதே போல் சட்டீஸ்கர் அரசும் ரூ.1கோடி பரசு தொகை அறிவித்துள்ளது. மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பாக ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர மாநிலங்கள் அறிவித்துள்ள பரிசு தொகைகளையும் சேர்த்து கணபதியின் தலைக்கு மொத்தமாக ரூ.2.67 கோடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்களுக்கும் இதே போல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மத்திய மாநில அரசுகள் கூட்டாக ரூ.21 கோடிக்கு பரிசு தொகை அறிவித்துள்ளன.

தேசிய புலனாய்வு அறிவித்துள்ள பரிசு தொகையை உயர்த்தும்படி உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. நக்சல் தலைவர்கள் சரண் அடையும் பட்சத்தில் இந்த பரிசு தொகை அவர்களுக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்