முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜ கோரிக்கையை நிராகரித்த சிவசேனா: பங்கீட்டில் சிக்கல்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.17- மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுக்கு 135 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித் துள்ளார்.

அதே சமயம் இரு கட்சிகளுக்கு மிடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேச்சு நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடையே கூறியதாவது:

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுக்கு 135 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. அதை நான் நிராகரித்துவிட்டேன். எங்களின் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், சிவசேனா கட்சியை சேர்ந்தவர்தான் முதல்வர் பதவியை வகிப்பார்.

தொகுதி பங்கீடு விஷயத்தில் ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதற்கு மாற்று ஏற்பாடு உண்டு என்பதை பாஜக தலைவர்களுக்கு தெரியப்படுத்திவிட்டேன். இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் எதிர் மறையான கருத்துகளை தெரிவிக்க நான் விரும்பவில்லை.

பாஜக கூட்டணியில் 25 ஆண்டு களாக சிவசேனா உள்ளது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் தான், காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும்” என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்