முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை திறப்பு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், செப்.17 - கனமழை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 13 நாட்களுக்குப் பிறகு ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை மூடியிருந்ததால் மாநிலத்தின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் நிலவின. இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளது, வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் வாழும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

எல்லையோர சாலை அமைப்புக்குழு ராணுவ பொறியாளர்களுடன் இணைந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை போக்குவரத்துக்கு ஏதுவாக சீரமைத்துள்ளனர். இதனை ராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். சுமார் 3000 முதல் 6000 வாகனங்கள் பெரும்பாலும் டிரக்குகள் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லக் காத்திருக்கின்றன. இருப்பினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்போதைக்கு இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்