முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மோடிக்கு எதிரான அலை தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.29 - அமெரிக்காவில் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சி ஒரு புறம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் மோடிக்கு எதிர்ப்பு அலையும் அங்கு தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடுபவர்கள் மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் ஸ்கொயர் பகுதிக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டம் என்று இவர்கள் தயாராகி வருகின்றனர்.

2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒரு மாநில முதல்வராக இவர் அடக்கவில்லை என்பது இவர்களது பெரும் புகார் ஆகும். இதுவல்லாமல் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பும் மோடிக்கு எதிராக 30ஆம் தேதி சிடிசன் கோர்ட் என்ற நடைமுறையை மேற்கொள்கிறது. வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது.

மோடிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நியாயப்பாடு இல்லையென்றாலும் அமெரிக்காவுக்கு முதன் முதலாக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு இதனால் நெருக்கடியே என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்