முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மல்யுத்தம்: யோகேஷ்வர் தத் தங்கம் வென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான், செப்.29 - ஆசிய விளையாட்டு ஆடவர் மல்யுத்தப் பிரிவில் இந்தியாவின் யோகேஷ்வர் தத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்தியாவுக்கு இவர் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மல்யுத்தம், 65 கிலோ உடல் எடைப்பிரிவில், அரையிறுதியில் சீனாவின் யீர்லான்பீக் என்பவரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் யோகேஷ்வர் தத்.
நேற்று தோவான் ஜிம்னாசியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாஜிகிஸ்தான் வீரர் ஜாலிம்கான் யுசுபோவ் என்ற வீரரை 3-0 என்று அதிரடி வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

நேற்று இந்திய அணிக்கு சிறந்த நாளாக விளங்குகிறது. 20 கிமீ நடைப்போட்டியில் இந்திய வீராங்கனை குஷ்பிர் கவுர் வெள்ளி வென்றார்.

4 தங்கம், 5 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.
207 (101-61-45) பதக்கங்களுடன் சீனா முதலிடமும், 2ஆம் இடத்தில் தென் கொரியாவும், 3ஆம் இடத்தில் ஜப்பானும் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்