முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் சிறை முற்றுகை: போலீஸ் தடியடி

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், செப்.30 - பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள த‌மிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கக் கோரி தர்ணாவில் ஈடுபட முய‌ன்ற அதிமுகவினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சிறை அமைந்துள்ள பகுதியில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுக வினரிடம் போலீஸார் கூறும்போது, "பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையைச் சுற்றி 5 கி.மீ.சுற்றளவிற்கு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தனர்.

இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலைந்து சென்றதால் சிறை வளாக நுழைவு வாயிலுக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்டது. இதனை அறிந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் தடுப்புகளைத் தாண்டி, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறைச் சாலையை முற்றுகையிட்டனர். அப்போது, "அம்மாவை விடுதலை செய்யுங் கள்" என கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அதிமுக தொண்ட‌ர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத் தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து போகாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே போலீஸார் அவர்களை தடியடி நடத்தி களைத்தனர். இதனால் பலருக்கு கீழே விழுந்து லேசான காயம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்