முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு விரைவில் புதிய கொள்கை: ராஜ்நாத்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.30 - காஷ்மீர் குறித்த புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் தீவிரவாத அமைப்பு களுடன் பேச்சுவார்த்தை நடத்த தூதர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். காஷ்மீரில் அதே அணுகுமுறை கடைபிடிக்கப் படாது. அந்த மாநிலத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நிச்சயமாக தூதர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். அத்தகைய முயற்சியால் எந்தப் பலனும் கிடைக்காது. தற்போது காஷ்மீர் எல்லையில் தீவிர வாதிகளின் ஊடுருவல் குறைந் துள்ளது. எல்லையில் பாது காப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது.

1990-களில் காஷ்மீர் பள்ளத் தாக்கில் இருந்து வெளியேறிய 3 லட்சம் பண்டிட்களை மறுகுடியமர்த்த உரிய இடத்தை தேர்வு செய்யுமாறு காஷ்மீர் அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களை மறுகுடியமர்த்த மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்